உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan)தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கான ஆதாரங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சியமளிக்க வாய்ப்பு
அதன்போது, அவர் தொடர்ந்தும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானை அழைத்து விசாரணை நடத்தினார்கள், கைது செய்வதென்பது காவல்துறையினரின் வேலை.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தொடர்பான பல தகவல்கள் எங்களிடம் உள்ளன.இது தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளருக்கும் அறிவித்துள்ளேன்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். வாய்ப்பு கிடைத்தால் சாட்சியமளிக்கக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும்” என கூறியுள்ளார்.