Home இலங்கை அரசியல் மியன்மார் அகதிகளின் தற்போதைய நிலை : வெளியான தகவல்

மியன்மார் அகதிகளின் தற்போதைய நிலை : வெளியான தகவல்

0

இலங்கையிலுள்ள மியன்மார் (Myanmar) அகதிகளுக்கு குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம்
நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” மியன்மாரிலிருந்து வந்த அகதிகளாக வந்தவர்கள் தற்போது முல்லைத்தீவிலுள்ள (Mullaitivu) கேப்பாப்பிலவு முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே தேசிய சர்வதேச சட்டதிட்டங்களின் அடிப்படையில் நாங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தேவையான நேரத்தில் எடுப்போம்.

இதுவரையில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இராஜதந்திர நகர்வுகளின் மூலமாக நடவடிக்கை எடுக்கின்றோம். எனவே பொருத்தமான நேரத்தில் இது தொடர்பாக அறிவிப்போம்” என தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/l1VbTIhB2jU

NO COMMENTS

Exit mobile version