Home இலங்கை அரசியல் அநுர அரசுடன் இணைந்து செயற்பட தயார் – சி. வி விக்னேஸ்வரன் பகிரங்கம்

அநுர அரசுடன் இணைந்து செயற்பட தயார் – சி. வி விக்னேஸ்வரன் பகிரங்கம்

0

எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் (CV Vigneswaran) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் நேற்று புதன்கிழமை (09.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். 

புதிய அரசியல் யாப்பை

நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம். எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் செயற்படுகிறோம்.

புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என சி. வி விக்னேஸ்வரன் (CV Vigneswaran) தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

https://www.youtube.com/embed/s3I13nS2JqE

NO COMMENTS

Exit mobile version