Home இலங்கை அரசியல் குழிக்குள் தள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி: பதவியில் இருந்து தூக்கப்படுவாரா சி.வி.கே

குழிக்குள் தள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி: பதவியில் இருந்து தூக்கப்படுவாரா சி.வி.கே

0

எப்போது சி.வி.கே சிவஞானம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் கால் எடுத்து வைத்தாரோ அன்றே தமிழரசு கட்சியின் கொள்ளை மற்றும் கோட்பாடு எல்லாம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக மட்டக்களப்பின் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட் கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் விமர்சித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சி.வி.கே சிவஞானம், தமிழரசுக் கட்சியில் இருந்து உடனடியாக பதவி விலகுவது அவருக்கு மிகவும் நல்லது.

அவர் மட்டுமன்றி, அவருக்கு பின்புலமாக தொழிற்படும் அனைவரும் பதவி விலக வேண்டும் என்பது தமிழரசுக் கட்சியின் அங்கத்தவராக எனது கோரிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழரசு கட்சியின் அரசியல் நகர்வு, உள்ளூராட்சி மன்ற ஆட்சியமைப்பு மற்றும் பலதரப்பட்ட அரசியல் நகர்வு தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

 

https://www.youtube.com/embed/vblwxhnnvJE

NO COMMENTS

Exit mobile version