தக் லைஃப்
நாயகன் படத்திற்கு பின் எப்போது கமல் ஹாசன் – மணி ரத்னம் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பல வருட காத்திருப்பு தக் லைஃப் படத்தின் அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. நாயகனை மிஞ்சும் அளவிற்கு தக் லைஃப் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மருமகளுடன் VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட அழகிய போட்டோ.. இதோ பாருங்க
மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் தக் லைஃப் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது.
