Home சினிமா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு, வெளியேறிய பிரபலம்…. மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்த...

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு, வெளியேறிய பிரபலம்…. மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்கள்

0

குக் வித் கோமாளி 5

குக் வித் கோமாளி, சிரிக்கலாம் ஜாலியா பங்காளி என கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் இப்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த 5வது சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார், இப்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

தனது தொகுப்பாளர் வேலையை செய்ய விடாமல் பெண் போட்டியாளர் (அவரும் தொகுப்பாளர்) ஒருவர் தன்னை ஆதிக்கம் செய்யும் வகையில் நடந்ததாகவும், இதனை தயாரிப்பு குழுவிடம் கூறியும் எந்த மாற்றமும் இல்லை.

எனவே நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறியதாக மணிமேகலை போட்ட பதிவு மற்றும் வீடியோ தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபலங்கள் ஆதரவு

இப்படி மணிமேகலை தனக்கு ஏற்பட்ட விஷயத்தை தைரியமாக வெளியே கூறியது குறித்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

யார் யார் என்ன பதிவு போட்டுள்ளார்கள் என்பதை காண்போம்.

குரேஷி
நீங்கள் எடுத்த முடிவு சரியாக தான் இருக்கிறது, இதையெல்லாம் கடந்து அடுத்தகட்ட லெவலுக்கு போவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மணிமேகலைக்கு ஆதரவாக பதிவு போட்டுள்ளார்.


அனிதா சம்பத்

இந்த மாதிரி துணிச்சலான முடிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு இடத்தில் நமக்கு மரியாதை இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகிக் கொள்வது நம்முடைய கவுரவத்திற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம். சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.


சுசித்ரா

இதுவரை எந்த ஒரு எதிரிகளை கூட சம்பாதிக்காத மணிமேகலை எந்த அளவிற்கு டார்ச்சர் இருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார், இதுதான் பிரியங்காவின் உண்மையான குணம் என வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version