இலங்கை தமிழரசுக்கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் இரா சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் இரா சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ( 15 ) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் போன்ற கொலையாளி
இதன் போது கருத்து தெரிவித்த சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், ஈஸ்டர் குண்டு தாக்குதல்
தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது
செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும்
வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்ட
விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து
அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும்
கருத்து தெரிவித்தார்.
அதன்போது கருத்து வெளியிட்ட சஜித் ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகளை கைது செய்யப்படுவார்கள் இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் தெரிவித்துள்ளார்.