Home முக்கியச் செய்திகள் கோர தாண்டவமாடும் டித்வா – வடக்கின் நிலை: இன்று கரையை கடக்கும் புயல்

கோர தாண்டவமாடும் டித்வா – வடக்கின் நிலை: இன்று கரையை கடக்கும் புயல்

0

டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது (காலை 8.00 மணி) மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நண்பகலில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமான மழை

கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும்.

ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

இன்று படிப்படியாக சீரடையும்

வடமேல் மாகாணம் இன்று கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version