Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகள் கையளிக்கப்படும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகள் கையளிக்கப்படும் திகதி அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் 

இந்தநிலையில் தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை வாக்காளர்களுக்கு கையளிப்பதற்கான விசேட தினமாக செப்டெம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 17,140,354 வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.  

Source: https://tamilwin.com/article/date-handover-voting-cards-presidential-election-1724217936

NO COMMENTS

Exit mobile version