Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்

கிளிநொச்சியில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்

0

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில்
ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த ஆணின் சடலம் இன்றையதினம் (15.07.2024) கரையொதுங்கியுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸார் விசாரணைகள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காணொளி – https://dai.ly/x928y38

Source: https://tamilwin.com/article/dead-body-of-a-man-washed-ashore-in-kilinochchi-1721052440

NO COMMENTS

Exit mobile version