Home இலங்கை குற்றம் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

நீர்கொழும்பு – சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (04) மாலை கிடைத்த செய்திக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலதுருவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

தலைமறைவு

கொலை செய்யப்பட்ட பெண், குறித்த விடுதியில் ஆண் ஒருவருடன் வசித்து வந்ததுடன், கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளதாகவம் விசாரணையில் தெரியவந்துள்ளது..

குறித்த பெண்ணின் கொலைக்கு பின்னர் அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

NO COMMENTS

Exit mobile version