Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் தொடரும் மர்மக் கொலைகள் – 84 வயது மூதாட்டியின் சடலம் மீட்பு

தமிழர் பகுதியில் தொடரும் மர்மக் கொலைகள் – 84 வயது மூதாட்டியின் சடலம் மீட்பு

0

மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுதிட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (28.08.2025) மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

வீட்டில் தனிமையில் வசித்து வந்த கோபாலன் குண்டுமணி (வயது – 84) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

காவல்துறை விசாரணை

மூதாட்டியின் சடலமொன்று இருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலத்தை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2021ம் ஆண்டு நிதர்சனா என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த பகுதியிலே உயிரிழந்தார். அதேபோலவே மூதாட்டியின் சடலமும் அதேபகுதியில் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு எவ்வாறு இடம்பெற்றது? கொலையா? மரணத்திற்கான காரணம் என்ன? பல்வேறு கோணத்தில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version