Home அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் பரவும் காட்டுத்தீ : 16 பேர்வரை உயிரிழப்பு

லொஸ் ஏஞ்சல்ஸில் பரவும் காட்டுத்தீ : 16 பேர்வரை உயிரிழப்பு

0

அமெரிக்காவின் (America) லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.

கோஸ்டல் பொலிசேட்ஸில் ஏற்பட்ட தீ சுமார் 11 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000இற்கும் மேற்பட்ட வீடுகள் 

மேலும், அல்ரடேனா (Altadena) பகுதியில் காட்டுத் தீ இன்னும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, அப்பகுதியில் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும், லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 10,000இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றிலுமாக அழிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version