Home முக்கியச் செய்திகள் பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: பரபரப்பு காணொளி

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: பரபரப்பு காணொளி

0

மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர் கம்பளை – கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் நசீர் என காவல்துறையினர் குறிப்பிட்டள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர் சிறுமியின் உறவினர் என்பதுடன் குறித்த நபர் கத்தார் மற்றும் ஜப்பானில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ரக வாகனம் துருவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை மீட்க முன்வந்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/hciO2vTWQJQ

NO COMMENTS

Exit mobile version