Home முக்கியச் செய்திகள் இன்று முதல் சீமெந்தின் விலையில் மாற்றம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்று முதல் சீமெந்தின் விலையில் மாற்றம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

நாட்டில் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

கட்டுமானத் தொழில்

குறித்த விலைத் திருத்தம், உள்ளூர் கட்டுமானத் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, செலவுப் பலனை நுகர்வோருக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/decided-to-reduce-cement-prices-in-sl-1714539696?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version