க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்துவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சைகள்
ஜனாதிபதி தலைமையில் நேற்று (29.08.2025) நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடலில் போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.