ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) பார்வையிட சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “தன்னை அரசியலுக்குள் கொண்டு சென்ற தலைவரைப் பார்க்கச் சென்றதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத அரசியல்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அவர் ஆரோக்கியமாக இருக்கின்றார். கோபம் மற்றும் பழிவாங்கும் அரசியல் நாட்டுக்கு பொறுத்தமானதல்ல.
இவ்வாறான அரசியலால் சமூகத்திலுள்ள பிரிவினைவாதம் மேலும் அதிகரிக்கும்.
பிரிவினைவாதங்களை சரி செய்வதை விடுத்து அவற்றை மேலும் ஊக்குவிப்பதானது நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் எனத் தெரிவித்தார்.