Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அவதூறு பதிவு: அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அவதூறு பதிவு: அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

உரிய நடவடிக்கை

இது குறித்து நிலந்தி கொட்டஹச்சியின் சார்பில் அவரது சட்டத்தரணி நாமல் ராஜபக்‌ச, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். 

தனது கட்சிக்காரருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version