Home இலங்கை அரசியல் முளையிலேயே கிள்ளி எறியப்படும் இனவாதம் : பிரதமர் ஹரிணி சூளுரை

முளையிலேயே கிள்ளி எறியப்படும் இனவாதம் : பிரதமர் ஹரிணி சூளுரை

0

அரசியல் மாற்றத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் அற்ப அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை(racism) தூண்டும் முயற்சிகளை தோற்கடிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya) தெரிவித்துள்ளார்.

மக்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர் என்ற செய்தி மூலம் அரசாங்கத்திற்கான ஆணை தெளிவாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தமது அரசியல் தேவைகளுக்காக மக்களை பிரிக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும் அவர் இன்று(03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இனவாதத்திற்கு அரசாங்கம் இடமளிக்காது

எந்த வகையிலும் இனவாதத்திற்கு அரசாங்கம் இடமளிக்காது என பிரதமர் வலியுறுத்தினார்.

நாடு ஒன்றிணைவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பெற்றுள்ளது என்றும், இந்த வாய்ப்பை அரசாங்கம் ஒருபோதும் தவறவிடாது என்றும் அவர் கூறினார்.

மக்கள் தைரியமான தேர்வை எடுத்துள்ளனர்

“எங்கள் மக்கள் எங்களை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், அவர்கள் தைரியமான தேர்வை எடுத்துள்ளனர், அந்த அழைப்பிற்கு பதிலளிப்பதும் அந்த சவாலை ஏற்றுக்கொள்வதும் நம் கையில் உள்ளது.

இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் நான் அழைக்கிறேன். மக்கள் சொல்வதைக் கேளுங்கள், இந்த நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்றுவோம் என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version