Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட உதவித் தொகை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட உதவித் தொகை

0

விசேட தேவையுடைய மற்றும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம்

பிரதமரால் முன்வைக்கப்பட்ட இந்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version