Home இலங்கை அரசியல் வைத்தியர் அர்ச்சுனா எம்.பி தாக்கப்பட்டாரா..! வெளியான புதிய தகவல்

வைத்தியர் அர்ச்சுனா எம்.பி தாக்கப்பட்டாரா..! வெளியான புதிய தகவல்

0

தன்னை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ள நிலையில் தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா(Sujith Sanjaya Perera) தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் முற்றிலும் மறுக்கிறேன்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார்.

இதன்​போது எழுந்த குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார(nalin bandara),

யாழ்.மாட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றார்.  

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version