Home இலங்கை அரசியல் முன்னாள் எம்.பிக்களுக்கு பறந்த கடிதம் : நீக்கப்பட்ட வசதிகள்

முன்னாள் எம்.பிக்களுக்கு பறந்த கடிதம் : நீக்கப்பட்ட வசதிகள்

0

எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை (பிஸ்டல்) உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.

ஏறக்குறைய நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு துப்பாக்கியைப் பெற்றுள்ளனர்.

முன்னாள் எம்பிக்களின் அனைத்து வசதிகளும் இரத்து

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கொடுப்பனவு, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள். எரிபொருள் வசதி மற்றும் முத்திரை கட்டண வசதி இதனால் இல்லாமல் போனது

தேர்தல் வரை குடியிருப்பில் இருக்க அனுமதி

எவ்வாறாயினும், தேர்தல் நடைபெறும் நாள் வரை மாடிவெல எம்.பி.க்கள் குடியிருப்பில் உள்ள முன்னாள் எம்.பி.க்கள் தங்கியுள்ள குடியிருப்புகளை மாத்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அனைத்து எம்.பி.க்களும் தேர்தல் முடிந்த அன்றே தங்கள் அலுவலகங்களை ஒப்படைக்க வேண்டும். 

Source: https://ibctamil.com/article/defense-ministry-takes-back-firearms-1727634145

NO COMMENTS

Exit mobile version