கடந்த 1992 முதல் 32 வருட காலமாக ஹிஸ்புல்லாவின் தலைவராக அந்த அமைப்பை வழிநடத்தி வந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் அதன் எதிர்காலமும் அடுத்தகட்ட நகர்வுகளும் எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த அமைப்புக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நஸ்ரல்லாவின் வாரிசு, ஹாசிம் சபிதீன் மற்றும் நயீம் காசிம் ஆகியோரில் ஒருவரை நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருமித்த குரலில் சொல்லும் பதில் ஹாசிம் சபிதீன்
60 வயதான ஹாசிம் சபிதீன், ஹிஸ்புல்லாவின் உச்ச கவுன்சிலின் தலைவராக உள்ளார்.70 வயதான நயீம் காசிம் தற்போது ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவராக உள்ளார்.
இதற்கு சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் பதில் ஹாசிம் சபிதீன் [Hashem என்ற பெயரே ஆகும். ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரும் அவ்வமைப்பு எடுக்கும் அரசியல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஹாசிம் ஹிஸ்புல்லாவின் ராணுவ செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் ஜிகாத் கவுன்சிலிலும் இடம் பெற்றவர் ஆவார். மேலும் ஹாசிம் உயிரிழந்த நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.
வெளிநாட்டு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஹிஸ்புல்லா ஹசிம் சபிதீனை அவர்களின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பார் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.