Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வைக்குழு கூட்டம்!

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வைக்குழு கூட்டம்!

0

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வைக்குழு இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் குறித்த கூட்டத்திற்கு ஜனாதிபதி தலைமை வகித்திருந்தார்.

பாதுகாப்பு பிரதியமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரச்சினைகள் 

இலங்கையின் கடற்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அவற்றை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version