ஈரானின் அரச தொலைக்காட்சி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுகுக்கு பதிலடியாக இஸ்ரேலின் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரான் அரசு ஒளிபரப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் நேற்றைய தினம் (16.06.2025) குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது நேரடி ஒளிபரப்பின் நடுவிலேயே பெண் வாசிப்பாளர் கலையகத்தை விட்டு எழுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி பெறும் பதற்றம் உருவானது.
ஈரான் அரசு தொலைக்காட்சி
பின்னர் , ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு (IRIB) கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அரசு தொலைக்காட்சி மீண்டும் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியது.
BREAKING: The moment of the attack on IRIB (Iran State Broadcaster) pic.twitter.com/CVU26HHFub
— Faytuks Network (@FaytuksNetwork) June 16, 2025
இந்த நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலில் உள்ள channel- 12 மற்றும் channel – 14 ஆகிய செய்தி நறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலின் தகவல்களை மேற்கொள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால், குறித்த நிறுவனங்களின் ஊழியர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
