Home உலகம் லெபனான் எல்லையில் இஸ்ரேல் எழுப்பும் சுவர்.! UNIFIL படையின் அறிவிப்பு

லெபனான் எல்லையில் இஸ்ரேல் எழுப்பும் சுவர்.! UNIFIL படையின் அறிவிப்பு

0

லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் எழுப்பியுள்ள பாதுகாப்பு சுவர், சர்வதேச எல்லையை மீறி கட்டப்பட்டுள்ளது என லெபனான் அதிபர் ஜோசப் அவுன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து, இஸ்ரேல் ராணுவம் அந்த சுவரை அகற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் தெற்கு லெபனான் எல்லைக் காவல் படை (UNIFIL) அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லாவுடனான போர் 

இஸ்ரேல்–காசா போரின் போது, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா போராளிகள் ஈடுபட்டதைத் தொடர்ந்து, லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் உருவானது.

Image Credit: BBC

பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டில் கடந்த ஆண்டு இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இஸ்ரேலின் வடக்கு எல்லை

மேலும், 2022ஆம் ஆண்டு காசா மோதல் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் தனது வடக்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

Image Credit: The Times of Israel

அதன் ஒரு பகுதியாக யாரோன் பகுதியில் கட்டப்பட்ட சுவர், லெபனானின் நிலப்பரப்பை மீறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்கில் UNIFIL தரப்பில் இருந்து சுவர் அகற்றம் கோரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version