Home இலங்கை அரசியல் வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணி

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணி

0

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி
முன்னணி (Democratic Left Front) தாக்கல் செய்தது.

வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல்
மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People Front), மற்றும் ஜனநாயக
இடதுசாரி முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது.

வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்துள்ளது.

அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/democratic-left-front-filed-nomination-in-vanni-1728468179

NO COMMENTS

Exit mobile version