Home இலங்கை அரசியல் RSS சத்தியலிங்கம் சந்திப்பின் பின்னணி! சஜித் – சுமந்திரன் ஒப்பந்தத்தால் குழப்பம்

RSS சத்தியலிங்கம் சந்திப்பின் பின்னணி! சஜித் – சுமந்திரன் ஒப்பந்தத்தால் குழப்பம்

0

இம்முறை மும்முறை போட்டியாக மாறியுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை சர்வதேச நாடுகள் தீவிரமாக அவதானித்து வருகின்றது.

இதன் பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தினை தொடர்ந்து சஜித் பிரேமதாசவிற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் இந்த தீர்மானம் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பில் சத்தியலிங்கம் உள்ளதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பல விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

 

NO COMMENTS

Exit mobile version