Home இலங்கை அரசியல் வவுனியாவில் இன்று கூடுகின்றது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

வவுனியாவில் இன்று கூடுகின்றது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

0

 ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று(5) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாகக் கூடும் ஜனநாயகத் தமிழ்த்
தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில்
ஆராயவுள்ளது.

அரசியல் பயணம்

அத்துடன் அடுத்தகட்டமாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது
குறித்தும் விரிவாகக் கலைந்துரையாடவுள்ளதோடு உள்ளூராட்சி சபைத் தேர்தலை
முகங்கொடுப்பதற்கான வியூகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.

கூட்டணிக்குள் இளந்தலைமுறையினரை உள்வாங்குதல் மற்றும் சிரேஷ்ட தலைவர்களின்
எதிர்கால அரசியல் பயணம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாடப்படவுள்ளன
என்று தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version