Home இலங்கை வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட அதிகளவான இலங்கையர்கள்

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட அதிகளவான இலங்கையர்கள்

0

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமை காரணமாக, குவைத்திலிருந்து 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பொலிஸாரால் கைது

அவர்கள் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்கு
முன்னர், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இலங்கை தூதரகம் தலையிட்டு அவர்களின் விடுதலைக்கு ஏற்பாடுகளை செய்ததாக
கூறப்படுகிறது.

அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அவர்களுக்கு பயணச்
செலவுகளையும் வழங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version