Home இலங்கை அரசியல் முல்லைத்தீவில் புதிய பாலம் அமைக்க பிரதி அமைச்சர் நடவடிக்கை

முல்லைத்தீவில் புதிய பாலம் அமைக்க பிரதி அமைச்சர் நடவடிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உரிய
அமைச்சுக்களுடன் கலந்துரையாடி வட்டுவாகல் பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, நாடாளுமன்ற
உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நேற்று (29.11.2024) பார்வையிட்டனர்.

இதன்போதே, புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

இதேவேளை, அனர்த்தப் பாதிப்பு
நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை
தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
சுட்டிக்காட்டியதுடன், அதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள்
எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார். 

NO COMMENTS

Exit mobile version