Home இலங்கை சமூகம் யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பொதுமக்களிடம் முன்வைக்கும் கோரிக்கை

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பொதுமக்களிடம் முன்வைக்கும் கோரிக்கை

0

யாழ். (Jaffna) பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளில்
தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவ முன்வருமாறு கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்
மனோகரன் சோமபாலன் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை
தொடரும்பட்சத்தில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவ முன்வாருங்கள். 

 சீரற்ற காலநிலை

அண்மைய சில நாட்களாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்திலே
காணப்படுகின்ற சீரற்ற காலநிலை என்பது எங்களுடைய தமிழ் தேச உறவுகளை
அனரத்த ரீதியான பாதிப்புகளுக்கு உருவாக்கியுள்ளது.

அந்தவகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளாமானவர்கள் வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27,28,29ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த பரீட்சைகள்
யாவும் கலைப்பீடாதிபயினால் பிற்போடபட்டுள்ளது.

அவ்வளவு தூரம் மழையின் நிலை
காணப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக
சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி வருகின்றார்கள். அவ்வாறு தங்கி வருகின்ற விடுதிகள் யாவும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றன. 

கூடுமான உதவி 

வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு
உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த அனர்த்தம் மிகுந்த வேதைனையை
வழங்கியுள்ளது. இந்த சவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம்.
எங்களுடைய கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளோம்.

காலை வேளை உணவுகளையும் வழங்கி வருகின்றோம். மாணவர்களுக்கு திடீர் அனர்த்தத்தின் பொழுது விரிவுரையாளர்கள் பீடாதிபதிகள்
உதவியாக உள்ளனர்.

உயர்தர பரீட்சை பிற்போடபட்டுள்ள நிலையில் கல்வி பொருளாதார
வாழ்வியல் ரீதியில் நாம் பிற்போடபட்டுள்ளோம்.
மழை தொடரும்பட்சத்தில் எமது மாணவர்களுக்கு பலத்தில் உள்ளவர்கள் சமூகத்தில்
உள்ள நபர்கள் பொருளுதவி மற்றும் நிதியுதவியையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version