தென்கொரியாவில் இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தெருக்கள், சாலைகள் மற்றும் வீடுகள் என காணும் இடம் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல பனிப்படர்ந்து காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தலைநகர் சியோல் அருகேயுள்ள யோங்கினில் சாலை முழுவதும் 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு பனிக்கட்டிகள் கிடப்பதால், வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
திக்குமுக்காடும் மக்கள்
மணலில் சிக்கிய வாகனங்களை போல, ஆங்காங்கே கார்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சியோல் உள்பட அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டதால், 140 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 1907 ஆம் ஆண்டு முதல் அங்கு பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.