Home இலங்கை அரசியல் தேசபந்துவின் முடிவு சபாநாயகரிடம்..!

தேசபந்துவின் முடிவு சபாநாயகரிடம்..!

0

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்குமாறு கோரி சபாநாயகரிடம் அரசாங்கம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்தத் தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரசாங்கம் யோசனை

தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பிக்கட்டு சுமார் 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறிருக்க, பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அவரை பதவி நீக்குமாறு கோரி சபாநாயகரிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version