Home இலங்கை அரசியல் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தமே பிரித்தானியா விதித்துள்ள தடை : நாமல் சாடல்

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தமே பிரித்தானியா விதித்துள்ள தடை : நாமல் சாடல்

0

இலங்கையின் போர்வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் தளத்திலேயெ அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு…

இது நீதி அல்ல, மாறாக சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவித்து வருகின்றனர், இதன் மூலம் நமது தேசத்தின் நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது.

மேலும், சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்குவதற்கான சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version