Home இலங்கை அரசியல் தேசபந்து தென்னகோனின் கைதின் பின்னர் கலக்கத்தில் மகிந்த அணி! சிக்குவாரா சவேந்திர சில்வா.!

தேசபந்து தென்னகோனின் கைதின் பின்னர் கலக்கத்தில் மகிந்த அணி! சிக்குவாரா சவேந்திர சில்வா.!

0

அரகலய போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

இவ்வாறிருக்க, அரகலய காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸின் பின்னணியில் இவர்கள் இயங்கினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியான ஹரக் கட்டாவின் சாட்சியங்களுக்கமைய டிரான் அலஸின் கைதும் இடம்பெற வேண்டும் என்றே கூறப்பட்டது.

ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போராட்டக்காரர்களை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version