Home இலங்கை சமூகம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

0

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் மற்றும் நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டத்தை இன்று (12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

முதலீட்டு வலயங்கள்

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபர் கூறியுள்ளார்.

அத்துடன் பிங்கிரிய முதலீட்டு வலயம் அதன் நிறைவின் பின்னர் 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் 75,000 வேலை வாய்ப்புகளை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள “டொங்ஷியா கைத்தொழில்” லங்கா நிறுவனத்தையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version