Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பிரதமரால் வியாபார நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் பிரதமரால் வியாபார நிலையம் திறந்து வைப்பு

0

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன திறந்து வைத்துள்ளார். 

இதன்போது, மூன்று
இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபார சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில்
கலந்து கொண்டு, பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

 அபிவிருத்தி குழு கூட்டம் 

மேலும், விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, விவசாயம்,
போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு வட மாகாணத்திற்கான பல திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் விமானப்படை உயரதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகள்
மற்றும் ஏனைய அரச திணைக்களத்தின் மாகாண மட்ட உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/pm-opened-shops-in-kilinochchi-1720878162

NO COMMENTS

Exit mobile version