Home உலகம் பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

0

பிரான்சில் (France) வரலாற்று சிறப்புமிக்க தேவாலயமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நிகழ்வானது, வடக்கு பிரான்சில் உள்ள Saint-Omer பகுதியில் அமைந்துள்ள இமான்குலேட் கான்செப்ஷன் (Immaculate Conception Church) தேவாலயத்தில்
தேவாலயத்தில் இன்று (2) ஏற்பட்டுள்ளது.

தேவாலயம் முழுவதும், தீ பரவியுள்ளதுடன் அதன் மணிக்கூண்டு இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயில் எரிந்து நாசம்

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் வெளியாகவில்லை.

மேலும், ஊடகங்கள் வெளியியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரியவருகின்றது.

90 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியிருந்த நிலையிலும், தேவாலயம் அதிக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகளில் பெரும் தீப்பிழம்புகள் மற்றும் புகை வானத்தில் உயர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version