Home இலங்கை அரசியல் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்தாத அபிவிருத்தி எதற்கு! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்தாத அபிவிருத்தி எதற்கு! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

0

சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய
இழுவை மடி படகு தொழில்களை கட்டுப்டுத்தாமல் எப்படி கடல்வளத்தை அபிவிருத்தி
செய்யமுடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சமரசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அறிவித்த விடயத்தை சுட்டிக்காட்டி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது
இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகள்

அவர் மேலும் தெரிவித்ததாவது

“தற்போதும் அதிகளவான இந்திய இழுவைப்படகுகள் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வந்து
செல்லுகிறது.

உள்ளூர் இழுவை மடி படகுகளும் சட்டவிரோத இழுவைமடி படகுகளும்
சட்டவிரோத தொழில்கள் மேற்கொண்டு வருவதனால் மீன் உற்பத்தி பெருகுமிடங்கள்
அழிந்து வருகிறது.

மீன் பெருக்கமும் இல்லாதுவருவகிறது. இதனால் ஜனாதிபதி
மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டது போன்று மீன் இல்லாத கடலை
எப்படி அபிவிருத்தி செய்யமுடியும்.

பொலித்தீன் பைகள் 

பொலித்தீன் பைகள் தற்போது காசுக்கு
விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வர்த்தகர்கள் தான் நன்மை அடைகின்றனர்.  பிளாஸ்ரிக் உற்பத்தி
செய்வோரை கட்டுப்படுத்தாது அப்பாவி மக்களை துன்புறுத்துகின்றீர்கள்

 அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் தற்போது கரைஒதுங்குகின்றன.

மேலும் வடக்கு கரையோரங்களில் கண்ணிற்கெட்டிய
தூரம்வரை எல்லை தாண்டிய இழுவைமடி படகுகள் வந்து செல்கின்றனர்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version