Home சினிமா வெற்றிமாறன் படம் வேண்டாம் என்றார்கள், ஆனால்.. தனுஷ் சொன்ன ரகசியம்

வெற்றிமாறன் படம் வேண்டாம் என்றார்கள், ஆனால்.. தனுஷ் சொன்ன ரகசியம்

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது.

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காம்போவாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் கூட்டணி இணைய பல போராட்டங்களை கடக்கவேண்டியது இருந்ததாம்.

நடிகை வரலட்சுமிக்கு விலை உயர்ந்த பரிசளித்த கணவர்.. இணையத்தை கலக்கும் வீடியோ

ரகசியம் 

இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் இது குறித்து தனுஷ் பகிர்ந்த விஷயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ” பொல்லாதவன் படத்தை பல தயாரிப்பாளர்கள் ரிஜெக்ட் செய்திருக்கின்றனர். எனக்கு கதை பிடித்திருந்தாலும் என்னுடன் இருப்பவர்கள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொல்லாதவன் படத்தை பண்ண வேண்டாம் என சொன்னார்கள்.

ஆனால் எனக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. வெற்றிமாறனிடம் நான் கண்டிப்பாக நாம் ஜெயிப்போம் என்று கூறினேன்” என தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version