Home இலங்கை சமூகம் குழந்தைகளுக்கு பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகளுக்கு பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

நீடிக்கப்பட்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகம் பரவி வருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு முதலீடு!

மருத்துவ சிகிச்சைக்கு 

குறித்த அறிகுறிகள் காணப்பட்டால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குழந்தைகள் மத்தியில் டைபாய்ட் காய்ச்சல் பரவுவது குறித்து குழந்தை நல மருத்துவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு நோய் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

NO COMMENTS

Exit mobile version