Home இலங்கை அரசியல் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவியுங்கள் : கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவியுங்கள் : கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendran) கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காெழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ. ஆனந்தவர்ணன் எனப்படும் அரவிந்தனை அவர் நேற்று (16.04) பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அரச பெருந்தோட்ட ஊழியர்களின் கொடுப்பனவுகள் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

பொய் வழக்குகள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26இல் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முகநூலில் கடந்த 2020இல் ஒரு படமும் 2022இல் ஒருபடமும் பகிரப்பட்டதாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி என்ற பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.

ஏற்கனவே, அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் பல பொய் வழக்குகளுக்கும் முகம் கொடுத்து விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டுகால இனிப்பு பண்டங்கள் : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

விடுதலைக்கு அழுத்தம்

 அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள சுமார் 400 பேர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் 2286 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.   அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று (16-04-2024)
அவரைச் சந்தித்து உரையாடியிருந்தேன். 

 சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையில் உள்ள படத்தை முகநூலில் பகிர்ந்தாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்துள்ளளதாகத் தெரிவித்தார்.

அடுத்த தடவை எப்போது நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என்ற திகதிகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் கூறினார்.

தன்னைக் கைது செய்து அடைத்துள்ளமையினால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருப்பதாகவும் தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் கோரினார்.

நாசாவின் செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கை பெண்!

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம்

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களது குரல்வளையை நசுக்கி தமிழர்களை தமது கொத்தடிமைகளாக வைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற அதிகாரத்தை காவல்துறையினருக்கு  வழங்கியுள்ளது.காவல்துறையினர் இனவாதமாகவே செயற்படுகின்றார்கள்.

 மீளுருவாக்கம் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆனந்தவர்ணன் கைது
செய்யப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அவரை  உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் கொடிய
பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படல் வேண்டுமெனவும்
வலியுறுத்துகின்றோம்.

அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும்
உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் கோருகின்றோம்” என வலியுறுத்தியுள்ளார். 

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version