Home உலகம் மன்னர் சார்லசை அவமதித்தாரா ட்ரம்ப் :வலுக்கும் கண்டனம்

மன்னர் சார்லசை அவமதித்தாரா ட்ரம்ப் :வலுக்கும் கண்டனம்

0

பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு நேற்று முன்தினம் (செப்.17) சென்றடைந்தார். அப்போது, அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

மன்னர் சார்லசை முந்திய ட்ரம்ப்

 அரச விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதியில், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

 இந்நிலையில், வின்சோர் கோட்டைப் பகுதியில் ராஜ ஊர்வலம் முடிவடைந்த பின்னர், அரசு அணிவகுப்பை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, மன்னர் சார்லஸை கடந்து சில அடிகள் முன்னதாக ஜனாதிபதி ட்ரம்ப் நடந்து செல்லும் காணொளி இணையத்தில் வெளியானது.

பிரிட்டன் மன்னருக்கு முன் அவரது விருந்தினர் ஒருவர் நடந்து செல்வது, அந்நாட்டு அரச நெறிமுறைகளை மீறும் செயல் எனக் கூறப்படும் நிலையில், ட்ரம்ப் அவ்வாறு நடந்து சென்றது அவமரியாதையான ஒன்று என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version