Home இலங்கை அரசியல் திலித் ஜயவீரவின் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்

திலித் ஜயவீரவின் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்

0

வர்த்தகர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) இணைந்துள்ளார்.

இதனையடுத்து, மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகமவை நான் அன்புடன் வரவேற்கின்றேன்.

அத்தோடு, பொதுத் தேர்தலில் எங்களின் அடுத்த போருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் திலும் அமுனுகம முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Source: https://ibctamil.com/article/dilith-is-a-former-minister-joined-jayaweera-party-1727399928

NO COMMENTS

Exit mobile version