Home இலங்கை அரசியல் அனர்த்த நிலையிலும் அரசியல் செய்யும் அரச அதிகாரிகள் – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அனர்த்த நிலையிலும் அரசியல் செய்யும் அரச அதிகாரிகள் – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

0

நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினருடன் அரச அதிகாரிகள் இணைந்து செயற்பட அஞ்சுவதாக சர்ஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சர்ஜன அதிகாரம் கட்சி

சர்ஜன அதிகாரம் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கல் தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

அரச அதிகாரிகளின் அச்சம்

சில பகுதிகளில் நிவாரண வழங்குவதற்கு அரச அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். அவர்களுக்கு சந்தேகமும் பயமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நான் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு அறிப்படுத்தியுள்ளேன். எவ்வித கட்சி பேதங்களையும் பார்க்காது இணைந்து செயற்படுமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

எங்கள் நிவாரண திட்டங்கள் எவ்வித அரசியல் இலாபங்களை கொண்டும் செயற்படுத்தப்படவில்லை.

அனுபவமுள்ள தலைவர்கள்

அனர்த்தங்களின் போதான நிவாரணங்களை செயற்படுத்திய அனுபவமுள்ள மக்கள் பிரதிநிதிகள் இன்று அதிகாரத்தில் இல்லை.ஆனால் அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய தொடர்புகள் அதிகம் உள்ளன.

ஆனால் எதிரணியினரை இணைத்து கொண்டால் தங்களுக்கு பிரச்சினை வரும் என அதிகாரிகள் பயப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version