Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதிகளில் வெள்ளத்தில் மூழ்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமான நிலையத்திற்கு திஹாரிய, மினுவங்கொட ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாலத்தில் வெடிப்புக்கள்

மேலும் அதிவேக நெடுஞ்சாலை அல்லது கொழும்பு – நீர்கொழும்பு வழியே வருபவர்கள் ஜா எல பகுதிகளில் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஜா-எல பாலத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையினால் ஒருவழிப் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது.

களனி கங்கை பெருக்கெடுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version