Home இலங்கை அரசியல் அநுர தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த முன்னாள் எம்.பி

அநுர தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த முன்னாள் எம்.பி

0

ஜனாதிபதி அநுர குமார தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம (Dilum Amunugama), நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும், அவை தற்போது காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை

இதேவேளை, ஆட்சிக்கு வருவதற்கு முன் கேலி செய்வது ஏற்கத்தக்கது என்றும், ஆனால் பதவியேற்ற பிறகு அவ்வாறு செய்வது ஏற்க முடியாது எனவும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், வாகனங்கள் திருடப்பட்டிருந்தால், அது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் என்றும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளிப்பதை தவறாக பயன்படுத்துவதாக கருத முடியாது எனவும் திலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியாயமற்ற செயல்

தற்போதைய அரசாங்கம் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வேலை செய்ய உத்தேசித்துள்ளதாயின், தமது விருப்பத்திற்கேற்ப அதனைச் செய்வதற்கு சுதந்திரம் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், உத்தியோகபூர்வமாக வாகனங்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் இல்லை என்பதற்காக அவற்றை காட்சிப்படுத்துவது நியாயமற்றது என திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version