Home இலங்கை அரசியல் இரண்டு வருடங்களில் 121 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ள தினேஷ் குணவர்தன

இரண்டு வருடங்களில் 121 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ள தினேஷ் குணவர்தன

0

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 121 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (17.12.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

மருத்துவப் பிரிவு 

2022 செப்டம்பர் 01 முதல் 2024 செப்டம்பர் 30 வரை பிரதமர் அலுவலக மருத்துவப் பிரிவு செலவுகளை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 121 இலட்சத்து 10,220 ரூபா செலவாகியுள்ளது.

இந்த செலவுகள் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலவழிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் எங்கே உள்ளது? அங்கிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம்? இது ஒன்றும் அதிக தூரம் இல்லை.

நாட்டின் அனைத்து முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அருகில் உள்ளன.

இவற்றை தடுத்து நிறுத்தவே மக்கள் அதிகாரத்தை எம்மிடம் கொடுத்துள்ளனர்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version