Home இலங்கை அரசியல் திலித் ஜயவீரவினால் நடத்தப்படவிருந்த இரவு விருந்துக்கு தடை

திலித் ஜயவீரவினால் நடத்தப்படவிருந்த இரவு விருந்துக்கு தடை

0

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவினால் நடத்தப்பட்ட இரவு விருந்தொன்றை தேர்தல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.

அனுராதபுரத்தில் நேற்று உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்ற கல்வியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதிதிகளுக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அநுராதபுரம் தேர்தல் ஆணையாளர் 

அநுராதபுரம் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாருடன் அதிகாரிகள் குழு ஹோட்டலில் விருந்துக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும், விருந்தினர்களுக்கு வழங்கப்படவிருந்த மது போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version